Home இந்தியா மண்டேலா இறுதி சடங்கு: பிரதமர் மன்மோகன்சிங்– சோனியா பங்கேற்பு

மண்டேலா இறுதி சடங்கு: பிரதமர் மன்மோகன்சிங்– சோனியா பங்கேற்பு

537
0
SHARE
Ad

sonia_manmohan--621x414

ஜோகனஸ்பர்க், டிசம்பர் 7– மண்டேலா இறுதி சடங்கில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் சோனியா காந்தி பங்கேற்கின்றனர்.

தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (95) நேற்று முந்தினம் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார்.

#TamilSchoolmychoice

இறுதிசடங்கு வருகிற 15–ந்தேதி அவரது சொந்த கிராமமான குலுவில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக நெல்சன் மண்டேலாவின் உடல் ராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு உடல் பதப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள யூனியன் கட்டிடத்தில் பொதுமக்கள் இறுதிஅஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.

அங்கு அணி அணியாக சென்று மக்கள் அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இறுதி சடங்கில் உலக தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பிலும் உயர்மட்டக் குழுவினர் பங்கேற்கின்றனர். ஆனால் அதில் கலந்து கொள்பவர்கள் யார் என்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை.

இருந்தாலும் பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மண்டேலாவின் இறுதிசடங்கில் பங்கேற்க தென்ஆப்பிரிக்கா செல்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன

இதற்கிடையே மண்டேலாவின் ஆன்மா அமைதி பெற நாளை (8–ந்தேதி) நடைபெறும் பிரார்த்தனையில் நாட்டு மக்கள் பங்கேற்கும்படி தென்ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.