Home நாடு வல்லினம் விவகாரம்: பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றம் கண்டனம்!

வல்லினம் விவகாரம்: பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றம் கண்டனம்!

654
0
SHARE
Ad

IMG_0327கோலாலம்பூர், டிச 8 – மின்னல் எப்.எம் அறிவிப்பாளர் தயாஜி (படம்) உருவாக்கத்தில் வல்லினம் இலக்கிய இதழ் வெளியிட்ட “கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்” என்ற சிறுகதை நாட்டில் பலரையும் கடும் கோபத்திற்கு உள்ளாக்கியிருப்பதோடு, அதற்கு ஆதரவு தெரிவித்து அடாவடியாக கருத்துக்களை வெளியிட்டு வரும் அதன் ஆசிரியர் ம.நவீன் மீதும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்கதை குறித்து பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்ற ஆலோசகர் சி.ம இளந்தமிழ் நேற்று விடுத்த அறிக்கையில், “பின்நவீனத்துவம் என்பது நல்ல விஷயம் தான். வல்லினம் இதழைப் பொறுத்தவரை சாதி எதிர்ப்பு, ஆண், பெண் சம உரிமை, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுவது, அரசியலில் நடக்கின்ற சிக்கல்களை துணிவுடன் எடுத்துச் சொல்வது போன்ற விஷயங்களைக் கூறுவதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இந்த கதையைப் பொறுத்தவரை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தக் கதை சமூகத்தில் ஒரு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக தமிழ் பள்ளிகளில் சுமார் 1 லட்சம்  குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்கள் கையில் இந்தக் கதை கிடைத்தால் என்ன ஆவது?”

“இன்னொன்று, கதை எழுதி அது சர்ச்சைக்குள்ளாவது இயல்பு தான். ஆனால் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டுமென்றே இந்த கதை வெளியிடப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றம் எண்ணுகின்றது. ஆங்கிலத்தில் இது போன்ற கதை வெளிவரவில்லையா என்று வல்லினம் குழுவினர் காரணம் காட்டுகின்றார்கள். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இது ஒரு பிற்போக்கான சிந்தனை என்றே எங்களுக்கு தோன்றுகிறது.” என்றார்.

#TamilSchoolmychoice

மேலும் பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்ற தலைவர் செல்வஜோதி இராமலிங்கம் கூறுகையில், “பின் நவீனத்துவத்தைப் பொறுத்தவரை ஒரு படைப்பை வாசகர்களின் பார்வைக்கு வைத்தவுடன் அதன் படைப்பாளன் இறந்து விடுவது போலானது என்று கூறுகிறது. அதாவது அதன் பின் அந்த படைப்பு குறித்து படைப்பாளன் தற்காத்து பேசக்கூடாது.”

“தயாஜியின் படைப்பு பற்றி விமர்சித்த வாசகர்களை வல்லினம் ஆசிரியர் நவீன் மடையர்கள் என்று திட்டியுள்ளது அவரது பொறுப்பற்ற அலட்சியப் போக்கை காட்டுகிறது.”

அதே நேரத்தில் மேலும் இதே போன்ற படைப்புகளை வழங்குவோம் என்று அவர் சூளுரைதுள்ளது அவரது ஆணவத்தைக் காட்டுகிறது” என்று தெரிவித்தார்.

மேலும், தமிழர்களின் பண்பாட்டையும், சமய நெறிகளையும் இழிவு படுத்திய அவர்கள் இருவரின் மீதும் தேச நிந்தனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ் மொழி, சமயம் மற்றும் இந்தியர் நலம் சார்ந்த அமைப்புகள் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது.