Home உலகம் 2013–ம் ஆண்டின் சிறந்த மனிதராக போப் பிரான்சிஸ் தேர்வு

2013–ம் ஆண்டின் சிறந்த மனிதராக போப் பிரான்சிஸ் தேர்வு

502
0
SHARE
Ad

POTD_Pope-baby_2521172b

நியூயார்க், டிச. 12– நியூயார்க்கில் இருந்து வெளிவரும் ‘டைம்’ பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக சேவை புரிந்து பிரபலமானவர்களை தேர்வு செய்து வருகிறது. டைம் பத்திரிகை வாசகர்கள் வாக்களித்து சிறந்த மனிதரை தேர்வு செய்து வருகிறார்கள். இந்த 2013–ம் ஆண்டில் சிறந்த மனிதராக போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

போப் ஆண்டவராக பிரான்சிஸ் பதவி ஏற்ற கடந்த 9 மாதத்தில் அமைதிக்காக அவர் ஆற்றும் தொண்டுக்காகவும், இளைஞர்கள் பலரை நல்வழியில் மாற்றும் சக்தியாக விளங்குகிறார் என்பதாலும் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டைம் பத்திரிகை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதுபற்றி வாடிகன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “சர்வதேச அளவில் பெருமை வாய்ந்த ஒரு பத்திரிகை அவரை சிறந்த மனிதராக தேர்வு செய்து இருப்பது பெருமை அளிக்கிறது. புனிதமாகவும், மத நம்பிக்கையுடனும் இருந்து அமைதிக்கும், சிறந்த நீதிக்காகவும் பாடுபடும் ஒரு மனிதருக்கு கிடைத்த சிறந்த விருதாக இதை கருதுகிறோம்” என்றார்.

டைம் பத்திரிகை சார்பில் சிறந்த மனிதர் விருது பெறும் 3–வது போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஆவார்.

இதற்கு முன் 1994–ம் ஆண்டில் போப் ஜான் பால், 1962–ல் 23–ம் போப் ஜானும் டைம் பத்திரிகையின் சிறந்த மனிதர் விருது பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.