கோலாலம்பூர், டிச 12 – ஹிண்ட்ராப் தலைவர் பி.உதயகுமாரின் தேச நிந்தனைக் குற்றச்சாட்டு குறித்த மேல்முறையீட்டு விசாரணை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நீதிபதி அஸ்மான் ஹுசைன் விசாரணை செய்வார் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 15 ஆம் தேதிக்கும், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதிக்கும் இடையே, அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுனுக்கு உதயக்குமார் எழுதிய கடிதத்தில், மலேசியாவில் ஏழை இந்திய சமுதாயம் சமூக ரீதியில் ‘இன ஒழிப்பு’ செய்யப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனால் அவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இவ்வருடம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி உதயகுமாருக்கு, கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் 30 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.