Home 13வது பொதுத் தேர்தல் “எனக்கும், டொனால்டுக்கும் இடையே விவாதம் தேவையற்றது” – வீ கருத்து

“எனக்கும், டொனால்டுக்கும் இடையே விவாதம் தேவையற்றது” – வீ கருத்து

740
0
SHARE
Ad

Speech-By-MCA-Youth-National-Chairman-Datuk-Dr-Ir-Wee-Ka-Siong-At-The-MCA-Youth-46th-AGMகோலாலம்பூர், டிச 19 – தனக்கும், டத்தோ டொனால்டு லிம் சியாங் சாய்க்கும் இடையே பொது விவாதம் நடத்துவது தேவையற்றது என்று மசீச இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் வீ கா சியாங் தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தில் பங்கு கொள்வதில் தனக்கு எந்த ஒரு அச்சமும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், தேர்தலின் கடைசி நேரத்தில் இப்படி விவாதம் நடத்துவது தேவையற்றது என்றும் வீ தெரிவித்தார்.

“மக்களும், ஊடகங்களும் நம்முடைய தேர்தல் அறிக்கையை வாசிக்க முடியும். அதுவே நம்முடைய நிலைபாடு” என்று நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தேர்தலில் தலைமைத்துவ பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுவிவாதம் நடத்த வேண்டும் என்று கட்சி அறிவித்ததால், துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நீங்களும், லிம் சியாங்கும் விவாதம் நடத்துவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு வீ மேற்கண்டவாறு பதிலளித்தார்.

வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கட்சியின் தலைமைத்துவ தேர்தலில் வீ மற்றும் லிம் ஆகிய இருவரும் தேசியத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.

இரண்டு பேருக்கும் வெற்றியடையும் வாய்ப்பு இருப்பதாக வீ தெரிவித்தார்.