Home நாடு விலையேற்றத்திற்கு எதிராகப் போராட வேண்டாம் – இப்ராகிம் அலி வேண்டுகோள்

விலையேற்றத்திற்கு எதிராகப் போராட வேண்டாம் – இப்ராகிம் அலி வேண்டுகோள்

618
0
SHARE
Ad

ibrahim-ali-slider1-300x257கோலாலம்பூர், டிச 19 – விலைவாசி உயர்வை எதிர்த்து மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டிய அவசியம் இல்லை என்று பெர்காசா அமைப்பின் தலைவர் இப்ராகிம் அலி தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வீதிகளில் இறங்கிப் போராடுவதால் பிரச்சனை தீர்ந்து விடாது. அது மேலும் நிலைமையை மோசமானாதாக்கும். என்னைப் பொறுத்தவரை பெர்காசா போன்ற அரசு சார்பற்ற இயக்கங்கள் அரசாங்கத்திற்கு மனு அனுப்பலாம்” என்று தெரிவித்துள்ளார்.

நாட்டின் விலைவாசி உயர்வு மற்றும் அரசாங்க மானியம் நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய முன்னணியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்கத் தொடங்கியதால் இப்ராகிம் அலி இன்று இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணியின் கப்பளா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரீஸல் மெரிக்கன் நைனா மெரிக்கன், தேசிய முன்னணியின் ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரிர் சமட் மற்றும் தேசிய முன்னணி செனட்டர் இஸாம் முகமட் ஆகியோர் நெடுஞ்சாலை டோல் கட்டண உயர்வு மற்றும் இதர பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர்.