Home 13வது பொதுத் தேர்தல் மசீச தேர்தல் : தேசிய இளைஞர் பிரிவுத் தலைவராக சோங் சின் வூங் தேர்வு!

மசீச தேர்தல் : தேசிய இளைஞர் பிரிவுத் தலைவராக சோங் சின் வூங் தேர்வு!

1042
0
SHARE
Ad

Chong Sin Woonகோலாலம்பூர், டிச 19 – இன்று நடைபெற்ற மசீச இளைஞர் பிரிவுக்கான தேர்தலில், தேசியத் தலைவர் பதவிக்கு மசீச கல்விப் பிரிவின் தலைவர் சோங் சின் வூன், பத்து தொகுதி இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ கோ கைக் மெங் ஆகிய இருவருக்கும்  இடையே நேரடிப் போட்டி நடைபெற்றது.

இதில் சோங் சின் வூங் (படம்) தன்னை எதிர்ப்புப் போட்டியிட்ட கோ வை விட 93 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

சோங் 794 வாக்குகளும், கோ 701 வாக்குகளும் பெற்றனர்.

#TamilSchoolmychoice

இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் பதவிக்கு  போட்டியிட்ட கிரிஸ் லீ சிங் யாங் தன்னை எதிர்ப்போட்டியிட்ட டிங் டாய் புக் – ஐ தோற்கடித்தார்.

லீ 844 வாக்குகளும், டிங் 650 வாக்குகளும் பெற்றனர்.

அதே போல், இளைஞர் பிரிவு பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட டத்தோ லியாங் கிம் சூன் 777 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட லிம் பான் ஹாங் 713 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.