Home வணிகம்/தொழில் நுட்பம் சிறு நடுத்தர தொழில் முனைவர்களை உயர்த்த வேண்டும்- முஸ்தாபா முகமட்

சிறு நடுத்தர தொழில் முனைவர்களை உயர்த்த வேண்டும்- முஸ்தாபா முகமட்

610
0
SHARE
Ad

Mustapa-Mohamed (1)

கோத்தா பாரு, டிசம்பர் 26 – நாட்டில் இருக்கும் 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர தொழில் முனைவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட வேண்டுமென்றும்   அடுத்தாண்டு தொடக்கம் சிறு, நடுத்தர தொழில் துறையை அரசாங்கம் மேம்படுத்த எண்ணம் கொண்டுள்ளது என அனைத்துலக வாணிப தொழில்துறை (மிதி) அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஸ்தாபா முகமட் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் வழி சிறு, நடுத்தர தொழில் முனைவர்கள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை மேலோங்கச் செய்ய முடியும். அதோடு, பொருளாதாரம், வணிகம் போன்ற் துறைகளில் மலேசிய துரித வளர்ச்சியைக் கண்டு வருகிறது. அவ்வாறான வளர்ச்சியில் சிறு, நடுத்தர தொழில் முனைவர்களும் பின் தங்கி விடக் கூடாது என்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறு முடிவெடுத்துள்ளது என அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சிறு, நடுத்தர தொழில் துறைகளில் பெரும்பலானோர் பூமிபுத்ராக்களே அதிக அளவில் ஈடுப்படுகின்றனர். மற்ற இனத்தவரின் ஈடுபாடு இதில் குறைவாகவே உள்ளது எனவும் தெரிவித்தார்.

2013 ஆம் ஆண்டிற்கான கிளாந்தான் சிறு, நடுத்தர தொழில்துறை தொழில்முனைவர்கள் நாள் என்ற திட்டத்தை தொடக்கி வைத்தப்பின் செய்தியாளர்களிடம் பூமிபுத்ரா தொழில் முனைவர்கள் சிறு, நடுத்தர தொழில் துறையினால் பல வளர்ச்சிகளை கண்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.