Home 13வது பொதுத் தேர்தல் மசீச புதிய நியமனங்கள் ஜனவரி 2 ல் அறிவிக்கப்படும் – லியாவ்

மசீச புதிய நியமனங்கள் ஜனவரி 2 ல் அறிவிக்கப்படும் – லியாவ்

845
0
SHARE
Ad

liow-tiong-lai5-june7_400_267_100கோலாலம்பூர், டிச 27 – மசீச கட்சியின் புதிய பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் மாநிலத் தலைவர்கள் குழு மற்றும் பிற பதவிகள் ஆகியவற்றிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் வரும் ஜனவரி 2 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் புதிய தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் அறிவித்துள்ளார்.

இது குறித்து லியாவ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மசீச கட்சியின் உருமாற்றுத் திட்டங்களை சரியான முறையில் கொண்டு சேர்க்க ஒவ்வொரு கிளைகளிலும் முக்கிய செயல்திறன் சுட்டிக்காட்டிகளை (Key Performance Indicators) அமைக்கப் போகிறேன். கடந்த சில நாட்களாக புதிய நியமனங்கள் குறித்து பல்வேறு ஆரூடங்கள் வெளியாகின்றன. ஆனால் எல்லோரும் அமைதியாக இருக்கும் படி நான் வலியுறுத்திக்கொள்கின்றேன். வரும் ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மத்தியச் செயலவை கூட்டத்திற்குப் பின் புதிய நியமனங்கள் குறித்து அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மசீச கட்சியின் உருமாற்றுத் திட்டங்களை செயல்படுத்துவதிலும், சீன சமுதாயத்திற்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் தான் தனது முழு கவனமும் இருக்கப் போவதாக லியாவ் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மேலும், “என்னுடைய தேர்தல் அறிக்கையில் 9 முக்கிய செயல்கள் குறித்து குறிப்பிட்டுள்ளேன். அவற்றை நிறைவேற்றுவதற்குத் தேவையான ‘வாகனம்’ வரும் ஜனவரி 2 ஆம் தேதி உருவாக்கப்படும். காரணம் கட்சியில் ஒரு அற்புதமான பயணத்தை உருவாக்க வேண்டும்” என்றும் லியாவ் தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் தேசியத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லியாவ், தனது தேர்தல் அறிக்கையில் தேசிய முன்னணியில் மசீச வின் இடத்தை உறுதிப்படுத்துவது, மற்ற இனத்தினரிடையே உள்ள தொடர்பை செம்மைப்படுத்துதல், சீன மக்களின் கல்விமுறையை நெறிப்படுத்துதல் போன்ற 9 முக்கிய அங்கங்களைக் குறிப்பிட்டிருந்தார்.