Home கலை உலகம் சத்தீஷ்கார் வாக்காளர் பட்டியலில் ஐஸ்வர்யாராய் பெயர்: விசாரணை நடத்த உத்தரவு

சத்தீஷ்கார் வாக்காளர் பட்டியலில் ஐஸ்வர்யாராய் பெயர்: விசாரணை நடத்த உத்தரவு

586
0
SHARE
Ad

AISWARYAரெய்கார்க், டிசம்பர் 30- மும்பையில் தனது கணவர் அபிஷேக்பச்சனுடன் வசித்து வரும் பிரபல இந்தி நடிகை ஐஸ்வர்யராயின் பெயர் சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் தந்தையுடன் வசிப்பதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளது.

சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ஜஷ்பூர் மாவட்டம் பதால்கான் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் குஹாரி கிராமத்தில் ஐஸ்வர்யராய் வசிப்பதாக அவரது பெயர் உள்ளது. வாக்காளர் பட்டியலில் ஜஸ்வர்யாராய் புகைப்படம் மிகத்தெளிவாக உள்ளது.

அந்த தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் ஜஸ்வர்யாராய் பெயர் இடம் பெற்று உள்ளது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பதாக மாவட்ட அதிகாரி தெரிவித்தார்.