Home நாடு சிலாங்கூர் சபாநாயகருக்கு கொலை மிரட்டல்!

சிலாங்கூர் சபாநாயகருக்கு கொலை மிரட்டல்!

487
0
SHARE
Ad

hannah-yeohசிலாங்கூர், ஜன 7 – சமூக வலைத்தளத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரின் புகைப்படத்திற்கு உணர்ச்சிப் பூர்வமாக கருத்துத் தெரிவித்தார் என்று கூறி சிலாங்கூர் சபாநாயகர் ஹன்னா இயோவிற்கு இணையத் தளம் வழியாகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

“கடந்த சனிக்கிழமை காலை தான் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைக் கண்டேன். உடனடியாக எனது பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் இருந்து அதை நீக்கினேன். கர்ப்பிணி பெண் குறித்து அப்படி ஒரு கருத்தை நான் கூறவில்லை. இனவாத பிரச்சனைகளை உருவாக்க இது ஒரு அபாயகரமான விளையாட்டு” என்று ஹன்னா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ” (Anti Semua Salah Umno) என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவன் எனது பேஸ்புக் வலைத்தளத்தில் என்னைக் கொல்லப் போவதாக மிரட்டினான். “Jom cari hannah ni… bunuh dia” என்று எனது பேஸ்புக் தளத்தில் எழுதியுள்ளான்” என்று ஹன்னா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த வாரம் முதல் பேஸ்புக்கில், பொதுப் பேருந்தில் தலையில் முக்காடு அணிந்த பெண் ஒருவர், உட்கார இடமின்றி தரையில் அமர்ந்து இருப்பது போலான புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஹன்னா இயோவின் பெயரும் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிகேஆர் கட்சியின் வியூக இயக்குனரான ரபிசி ரம்லி, கடந்த வாரம் காவல்துறையில், இதே போன்ற சமூக வலைத்தளம் தொடர்பான ஒரு புகாரை அளித்தார். அதில் தான் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நகர் முழுவதும் வெடி குண்டுகளை வைத்துள்ளதாக 4 வலைத்தளப் பதிவாளர்கள் தவறான மின்னஞ்சல் ஒன்றைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டினார்.