Home கலை உலகம் போலியோவை ஒழித்த நாடாக இந்தியா உயர்ந்துள்ளது: அமிதாப் பச்சன் மகிழ்ச்சி

போலியோவை ஒழித்த நாடாக இந்தியா உயர்ந்துள்ளது: அமிதாப் பச்சன் மகிழ்ச்சி

701
0
SHARE
Ad

amitabachanமும்பை, ஜன 16- போலியோ நோயை எதிர்த்து போராடி, அந்நோய்க்கு எதிரான பிரசரங்களின் வாயிலாகவும், சொட்டு மருந்து போன்ற தடுப்பு முறைகளின் மூலமாகவும் போலியோவை வெற்றி கொண்டு இந்நோயை முற்றிலுமாக ஒழித்த நாடாக இந்தியாவை உலக சுகாதார கழகம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து, போலியோ ஒழிந்த நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது பெருமைக்குரிய செய்தி. இதனையறிந்து நான் பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைகிறேன் என இந்தியாவின் ’சூப்பர் ஸ்டார்’ நடிகரும், போலியோவை ஒழிக்கும் முயற்சியில் கடந்த 10 அண்டுகளுக்கும் மேலாக சர்வதேச சிறுவர் நிதியமான ’யூனிசெஃப்’பின் நல்லெண்ண தூதராகவும் இருந்துவரும் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து இந்த நோயை முற்றிலுமாக ஒழிக்க நாட்டுக்கு துணை புரிந்த மருத்துவ பணியாளார்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆற்றிய இடைவிடாத-சோர்வடையாத சேவைகளும் நிதியுதவியும் பாராட்டுக்குரியவை’ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.