வாஷிங்டன், பிப்5 – அமெரிக்கா – சவுதி அரேபியா இடையேயான பாதுகாப்பு குறித்து பேச்சு நடத்த அமெரிக்க அதிபரான பராக் ஒபாமா அடுத்த மாதம் சவுதி அரேபியா செல்ல உள்ளார்.
அமெரிக்கா – சவுதி அரேபியா இடையேயான பாதுகாப்பு குறித்து பேச்சு நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமா சவுதி மன்னர் அப்துல்லாவை சந்தித்து பேசவுள்ளார்.
ஒபாமாவின் பயணத்தின் போது இருநாட்டு உறவுகள், பாதுகாப்பு, அணு ஆயுத கொள்ளை, வர்த்தகம் போன்றவை குறித்து பேச்சு நடக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கு முன், 2009ல் ஒபாமா சவுதி சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.