கோலாலம்பூர், பிப் 7- தலிபான்களின் துப்பாக்கி சூட்டுக்கு ஆளாகி, மீண்டும் உயிர் பெற்று கம்பீரமாக வலம்வந்து கொண்டிருக்கிறார் மலாலா. பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடி வரும் மலாலாவின் பெயர் குழந்தைகளுக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்த விருதுக்குழு உறுப்பினர் லிவ் ஹெசர்பெர்க் கூறுகையில், குழந்தையாக உள்ள மலாலா பாகிஸ்தானில் மட்டுமல்லாமல் உலக அளவில் பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்து வருகிறார்.
அவருக்கு மனித உரிமைக்கான ஐரோப்பிய யூனியனின் உயரிய சகாரோ விருது ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிறந்த மலாலா சிறுவயது முதல் பெண்களின் கல்விக்கு குரல் கொடுத்தும், போராடியும் வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மலாலாவின் பெயர் குழந்தைகளுக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் 110 நாடுகளில் பெண் கல்வி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, கடந்த 2000ம் ஆண்டு இந்த விருது முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.