தலைமை நீதிபதி சதாசிவம், ரஞ்சன்கோகை, சிவகீர்த்தி ஆகியோர் அடங்கிய குழு இன்று வெளியிட்டுள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
“குற்றவாளிகள் கருணை மனு மீதான நடவடிக்கையில் காலதாமதம் ஏற்கப்படுகிறது. இது போன்ற காலதாமதத்தை எதிர்காலத்தில் இல்லாமல் இருக்க போதிய சட்டநடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இனியும் காலதாமதம் ஏற்படாது என நம்புகிறோம்”
“மத்திய அரசு ஜனாதிபதியிடம் கருணை மனு மீதான முடிவு எடுப்பதில் காலக்கெடு விதிக்க வேண்டும். இந்த 3 பேர்களின் தூக்கை ஆயுளாக குறைக்கின்றோம். தேவைப்பட்டால் 3 குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை எவ்வளவு காலம் என்று தீர்மானித்து இவர்களை விடுதலை செய்வது குறித்தும் மத்திய , மாநில அரசுகள் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 432 படி முடிவு எடுத்து கொள்ளலாம்” இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
கருணாநிதி மகிழ்ச்சி
மூவரின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது குறித்து திமுக தலைவர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் அறிவுரை வழக்கியதன் படி மத்திய மற்றும் மாநில அரசுகள் மூவரையும் விடுவித்தால் தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.
குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் இதுவரை அனுபவித்த தண்டனையை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.