Home கலை உலகம் தனுஷ் படத்தில் இருந்து மனிஷா நீக்கம்!

தனுஷ் படத்தில் இருந்து மனிஷா நீக்கம்!

601
0
SHARE
Ad

dhanushmanisha17713_mசென்னை, பிப் 21 – வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படபிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க முதலில் இந்தி நடிகை அலியா பட்டிடம் பேசப்பட்டது.

அவர் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து வழக்கு எண் 18/9 படத்தில் நடித்த மனிஷாவை ஒப்பந்தம் செய்தார்கள். இந்நிலையில் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தனுஷ் பிரபல நடிகராக இருப்பதால் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என வினியோகஸ்தர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாம்.

#TamilSchoolmychoice

இதையடுத்து படத்திலிருந்து மனிஷா நீக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. அவருக்கு பதிலாக அமலா பால் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. தனுஷ் தயாரித்து நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி படத்திலும் அமலா பால் நடிக்கிறார்.