Home கலை உலகம் ஒரே நேரத்தில் ‘தல-தளபதி’ படங்களுக்கு இசையமைக்கும் அனிருத்!

ஒரே நேரத்தில் ‘தல-தளபதி’ படங்களுக்கு இசையமைக்கும் அனிருத்!

545
0
SHARE
Ad

str2_lo_2509_p17_anirudh ravichanderசென்னை, பிப் 24 – கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் நடிக்கும் படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறாராம். கௌதம் மேனன் அஜீத்தை வைத்து இயக்கும் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அல்லது அனிருத் இசையமைப்பார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் அஜீத் படத்திற்கு தான் தான் இசையமைக்கப்போவதாக அனிருத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கௌதம் மேனன் சிம்புவை வைத்து எடுத்து வரும் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். ஒரே நேரத்தில் தல, தளபதி படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு கிடைத்துள்ளது.

#TamilSchoolmychoice

அஜீத்-கௌதம் மேனன் படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் இரண்டாவது வாரம் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடல் எடையை குறைக்க தற்போது அஜீத் ஜிம்முக்கு சென்று கொண்டிருக்கிறார்.