Home உலகம் இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட நாசா முடிவு!

இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட நாசா முடிவு!

541
0
SHARE
Ad

vabவாஷிங்டன், பிப் 26 – தண்ணீர் தொடர்பான ஆராய்ச்சியில் இந்தியாவின் இஸ்ரோ அமைப்புடன் இணைந்த செயல்பட போவதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்சி மையம் தெரிவித்துள்ளது. நாசா மற்றும் இஸ்ரோ அமைப்பு ஆகியவை அடுத்து வரும் ஏழு ஆண்டுகளில் தண்ணீர் மற்றும் அது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளது.

அதன் முன்னோடியாக செயற்கைகோளை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் இந்தாண்டில் மூன்று செயற்கை கோளை தயாரிக்க உள்ளது. அவை தண்ணீர் சுழற்சி மற்றும் தண்ணீர் தொடர்பான தேசி்ய கொள்கை முடிவுகளின் பங்களிப்பாக அமையும் விதத்தில் இருக்கும் என தெரிவித்துள்ளது.

வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தும் வகையிலான இந்த ஆராய்ச்சி மூலம் கிடைக்கும் புதிய தகவல்களால் தண்ணீர் சுழற்சி மற்றும் நீர் வள மேலாண்மை பற்றிய கேள்விகளுக்கு விடையளிக்கும்.

#TamilSchoolmychoice

இத்தகைய ஆராய்ச்சி மூலம் விவசாயத்துறையில் குறுகிய கால வானிலை மற்றும் நீண்ட கால பருவ மாற்றம் பற்றியும், வெள்ளம் மற்றும் மக்களின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய வறட்சி உட்பட பல்வேறு தொடர்புகளை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவியாக அமையும் என நாசா தெரிவித்துள்ளது.