Home நாடு கிள்ளானில் புகைமூட்டம் அதிகரிப்பு!

கிள்ளானில் புகைமூட்டம் அதிகரிப்பு!

576
0
SHARE
Ad

p4 hazy032_c_c970151_14226_919கோலாலம்பூர், மார்ச் 4 – கடந்த சில வாரங்களாக வறட்சி, பிறகு தண்ணீர் பற்றாக்குறையைத் தொடர்ந்து தற்போது கிள்ளானில் புகைமூட்டமும் அதிகரித்திருக்கிறது.

நேற்றைய காற்றின் மாசு அளவு (Air pollutant index – API) ன் படி, கிள்ளானில் 5 இடங்களில் ஆரோக்கியமற்ற சூழ்நிலை நிலவுகின்றது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி போர்ட் கிள்ளானில் காற்றின் மாசு அளவு 136 ஏபிஐ (100 முதல் 200 ஏபிஐ என்பது ஆரோக்கியமற்றது) ஆக கணக்கிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மற்ற இடங்களான சிராம்பன்(112 ஏபிஐ), நெகிரி செம்பிலான் மற்றும் ஷா ஆலம் (101 ஏபிஐ), பந்திங் (117 ஏபிஐ) மற்றும் பேராக் மாநிலம் ஸ்ரீமஞ்சோங் (109 ஏபிஐ) ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் துறையின் அகப்பக்கத்தில், பல இடங்களில் புகைமூட்டத்தின் நிலை நடுத்தரமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

பேராக் மாநிலம் தைப்பிங்கில் (100 ஏபிஐ), ஈப்போ (83 ஏபிஐ), ஜோகூர் மாநிலம் மூவார் (97 ஏபிஐ), பினாங்கில் பிறை(94 ஏபிஐ), கெடா மாநிலம் சுங்கை பட்டாணி (99 ஏபிஐ) ஆக பதிவாகியுள்ளது.

காற்று மாசு அட்டவணையின் (ஏ.பி.ஐ) ன்படி,

0 முதல் 50 – இயல்பு நிலை,

51 முதல் 100 –  குறைவான புகைமூட்டம்,

101 முதல் 200 – ஆரோக்கியமற்ற சூழ்நிலை,

201 முதல் 300 – மிகவும் ஆரோக்கியமற்ற சூழ்நிலை,

301 மேல் தாண்டினால் அபாயகரமான சூழ்நிலை என்று கணக்கிடப்பட்டுள்ளது.