Home உலகம் செயற்கை இருதயம் பொருத்தப்பட்டவர் ‘தொழில்நுட்பக் கோளாறால்’ மரணம்!

செயற்கை இருதயம் பொருத்தப்பட்டவர் ‘தொழில்நுட்பக் கோளாறால்’ மரணம்!

582
0
SHARE
Ad

coeur-artificiel_eu04032014பாரீஸ், மார் 6 – உலகிலேயே முதன் முறையாக செயற்கை இருதயம் பொருத்தப்பட்ட நோயாளி ஒருவர், தனது செயற்கை இருதயம் எதிர்பாராத விதமாக செயல்பாட்டை நிறுத்தியதால் மரணமடைந்துள்ளார். பொதுவாக இருதய நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூளைச்சாவு ஏற்பட்ட வர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டு இருதயம் பொருத்தப்படுவது வழக்கம்.

ஆனால், அவ்வாறு இருதயம் வேண்டிக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகையால் உயிர் இழப்பு அதிகமாகக் காணப்படுகிறது. இத்தகைய உயிர் இழப்புகளைக் குறைக்கும் வகையில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று செயற்கையாக இருதயம் தயாரிக்கும் முயற்சியில் இறக்கி வெற்றி பெற்றது.

ஆனால், அவ்வாறு செயற்கை இருதயம் பொருத்தப்பட்ட முதல் நோயாளி மிகக் குறைந்த நாட்களிலேயே மரணமடைந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அறிவியலின் துணை கொண்டு முன்னேறி வரும் மருத்துவத் துறையில் மாற்று இருதயம் கிடைக்கும் வரை செயற்கை இருதயத்தைத் தற்காலிகமாகப் பயன்படுத்தி வந்தன.

#TamilSchoolmychoice

இவற்றின் ஆயுட்காலம் சில தினங்கள் தான். ஆனால், அத்தகைய செயற்கை இருதயங்களின் வாழ்நாளை அதிகப் படுத்தினால் இருதய நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் எனக் கருதிய பிரெஞ்ச் பயோமெடிக்கல் நிறுவனமான கார்மேட் அதற்கான முயற்சியில் இறங்கியது. அதன்படி, அந்நிறுவனம் தயாரித்த முதல் செயற்கை இருதயம் 76 வயது இருதய நோயாளி ஒருவருக்கு 1388430920410கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி பொருத்தப்பட்டது.

செயற்கை இருதயம் சிறந்த முறையில் இயங்கியதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி அவரது செயற்கை இருதயம் திடீரென தனது செயல்பாட்டை நிறுத்தியது. இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி 3-ஆம் தேதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை இருதயம் 75 நாட்கள் மட்டுமே இயங்யுள்ளது. நீண்ட நாட்களுக்கு வரும் என எதிர்பார்த்த முயற்சி தோல்வியடைந்துள்ளது சம்பந்தப்பட்ட செயற்கை இருதயக் நிருவனம் மற்றும் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது இச்சம்பவம்.