Home உலகம் சிறு நீர் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் விஞ்ஞானிகள் தகவல்!

சிறு நீர் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் விஞ்ஞானிகள் தகவல்!

700
0
SHARE
Ad

p01ts2g61243234324 (1)இங்கிலாந்த், மார்ச் 14 – தற்போது உலகில் மொத்தம் 700 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இதில் 100 கோடிக்கு அதிகமான பேர்  மின்சார வசதி இல்லாமல் வாழ்கிறார்கள். தற்போது சிறுநீரில் இருந்து மினசாரம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை கண்டறிந்துள்ளனர் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்.

உலகில் ஒரு நாள் சராசரியாக  உலக மக்கள் 1050 கோடி லிட்டர் சிறுநீர் கழிக்கிறார்கள். இது முழுவதும் வீணாகிறது. இந்த 1050 கோடி லிட்டர் சிறுநீரை கொண்டு ஒலிம்பிக்கில் இடம் பெறும் 4200 நீச்சல் குளங்களை நிரப்பலாம்.

இது குறித்து யாராவது நினைத்து இருப்போமா? உண்மையில்  விஞ்ஞானிகள் மனித கழிவுகள் வீணாவது குறித்து ஆராய்ந்தனர். உலக மக்கள் தொகையில் 7 பேரில் ஒருவர் அடிப்படை மின்சாரம் இல்லாமல் வாழ்கின்றனர்.

#TamilSchoolmychoice

உலகில் எண்ணெய் வினியோகமமும் குறைந்து கொண்டே வருகிறது. ஆகவே விஞ்ஞானிகள் நிலையான வழிகளில்  உலக மக்களுக்கு மின்சாரம் கிடைக்க புதிய வழிகளை கண்டறிந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு, இங்கிலாந்தின் பிரிஸ்டல் எந்திரியறிவியல் ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளர்கள் குழு, மனித சிறுநீரில் இருந்து செல்பேசி  சக்தியை பெற முடியும் என நிரூபித்தனர்.

ஒரு கட்டிடத்தில் 300 பேர் தங்கி இருந்தால் ஒரு கிரீன் பாக்ஸ் மூலம் ஒரு கிலோவாட் மின்சாரம் தயாரிக்கலாம்  என போட்டி விவரித்து விளக்கினார்.

சிறுநீர் மூலம் எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்க முடியும். இதற்கான ஆராய்ச்சிகள் அதிவேக அலவில் நடைபெற்று வருகிறது என  நுண்ணுயிர் மின்வேதியியல் மற்றும் தொழில்நுட்ப சொசைட்டி தலைவர் கோர்னீல் ராபேய் கூறினார்.மேலும் இதை  குறைந்து செலவில் தயாரிக்க முடியும் என கூறினார்.