Home உலகம் புதன் கிரகம் சுருங்குகிறதா? – நாசா தகவல்!

புதன் கிரகம் சுருங்குகிறதா? – நாசா தகவல்!

792
0
SHARE
Ad

solarsystemமார்ச் 19 – சூரியனின் மிக அருகாமைலுள்ள கிரகமான புதன், பாறைகளால் ஆனது. இக்கிரகம் படிப்படியாக சுருங்கி அளவில் சிறியதாக மாறி வருகின்றதென ‘நாசா’ மையம் அனுப்பியுள்ள ‘மெசஞ்சர்’ விண்கலம் கண்டு பிடித்துள்ளது.

கடந்த 4 கோடி ஆண்டுகளில் புதன் கிரகம் பரப்பளவில் சுமார் 7 கி.மீ சுற்றுளவு சுருங்கியுள்ளது. பொதுவாக புதன் கிரகம் குளிர்ச்சியானது. இதனால் அவை மெல்ல மெல்ல சுருங்கி அதன் பாகங்கள் சிதைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும், புதன் கிரகம் சுருங்குவது புதிராக உள்ளதாகவும், இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.