இலங்கை, மார்ச் 20 – இலங்கையில் தீவிரவாத் தடைப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர்களான ருக்கி பெர்ணாண்டோவும், அருட் தந்தை பிரவீனும் விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து இலங்கை காவல்துறை செய்தித்தொடர்பாளர் அஜித் ரோகன்னா கூறியதாவது,
இருவரும் பெண் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்படுத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர் என்று கூறியுள்ளார். அமெரிக்க அரசு, இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை சபையில் தாக்கல் செய்துள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறவுள்ள வேளையில்,
இலங்கையின் மனிதவுரிமை மீறல் தொடர்பாக மேலும் சில உண்மைகளைப் பரப்பி விடக்கூடும் என்ற அச்சத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர். இந்த கைது நடவடிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.