Home கலை உலகம் சசி,வரலட்சுமியை கஷ்டப்படுத்திய பாலா!

சசி,வரலட்சுமியை கஷ்டப்படுத்திய பாலா!

658
0
SHARE
Ad

Kollywood-news-8689சென்னை, மார்ச் 21 – சசிகுமார், வரலட்சுமியை தனது படத்துக்காக கடுமையான பயிற்சிகளை அளித்து கஷ்டப்படுதுகிறார் பாலா. பரதேசி படத்தையடுத்து பாலா இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு தாரை தப்பட்டை என பெயரிடப்படுகிறது.

போடா போடி படத்தில் நடித்த வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். வரலட்சுமிக்கு கரகாட்டம் ஆடிய அனுபவம் கிடையாது. பாலா படத்துக்காக அதை முறைப்படி கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தஞ்சையை சேர்ந்த கரகாட்ட கலைஞர்கள் குழு அவருக்கு பயிற்சியளிக்கிறது. காலையில் தொடங்கி மாலைவரை வரலட்சுமிக்கு பயிற்சி தருவதால் அவருக்கு கடும் சோர்வு ஏற்பட்டுள்ளதாம். மேலும் வேடத்துக்கு ஏற்ப உடல் எடையை குறைப்பதற்காக உணவு கட்டுப்பாடும் மேற்கொண்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

தாடிதான் தனது அடையாளம் என்றிருந்த சுப்ரமணியபுரம் சசிகுமார் இப்படத்துக்காக தாடியை இழக்கிறார். கற்றை மீசையையும், மெலிதாகவும் மாற்றிக்கொள்கிறார். நாதஸ்வர கலைஞராக சசி வேடம் ஏற்பதால் அதற்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

இளையராஜா இசை அமைக்கும் இப்படத்திற்கு ஏற்கனவே சில பாடல்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. படப்பிடிப்பு தொடங்குவதற்கான வேலை நடக்கிறது.