Home இந்தியா காங்கிரஸ் பிரமுகருக்கு அனுமதி மறுப்பு – மனு தாக்கல் செய்யாமல் திரும்பினார் நடிகை நக்மா!

காங்கிரஸ் பிரமுகருக்கு அனுமதி மறுப்பு – மனு தாக்கல் செய்யாமல் திரும்பினார் நடிகை நக்மா!

584
0
SHARE
Ad

nagma_storyமீரட், மார்ச் 23 – உத்தரபிரதேசத்தில் நடிகை நக்மாவுடன் வந்த காங்கிரஸ் பிரமுகருக்கு போலீசார் அனுமதி தர மறுத்ததால் நடிகை நக்மா மனுதாக்கல் செய்ய முடியாமல் திரும்பினார். உத்தரபிரதேசத்தில் மீரட் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடிகை நக்மா களம் இறக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மீரட் தொகுதியில் போட்டியிடுவதற்காக மனுதாக்கல் செய்ய நடிகை நக்மா, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சலீம் பார்தி உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் ஆட்சியாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

தேர்தல் மனுதாக்கல் நேரம் என்பதால் ஆட்சியாளர் அலுவலகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் நடிகை நக்மாவின் தேர்தல் மனுதாக்கல் தொடர்பான ஆவணங்கள் மாவட்ட தலைவர் சலீம் பார்தியிடம் இருந்துள்ளன.

#TamilSchoolmychoice

நீண்ட நேரமாகியும் சலீம் பார்தி அலுவலகத்திற்குள் வராததை கண்டு நக்மா வெளியே வந்து பார்த்தார். இதுகுறித்து நடிகை நக்மா கூறுகையில், சலீம் பார்தியை போலீசார் வாசலிலேயே தடுத்து நிறுத்தி விட்டனர்.

எனது ஆவணங்கள் அனைத்தும் அவர் வசம் தான் இருந்தது. மேலும் தேர்தல் விதிமுறையின் படி வேட்பாளருடன் 5 பேர் வரை உள்ளே செல்ல அனுமதி உண்டு. எனவே போலீசார் திட்டமிட்டு இதில் குளறுபடி செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் உயர் மட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு இன்று மனுதாக்கல் செய்ய உள்ளதாக நக்மா மேலும் தெரிவித்தார். நக்மாவுடன் வந்த காங்கிரஸ் பிரமுகர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.