Home தொழில் நுட்பம் அக்குலஸ் விஆர் (Oculus VR) நிறுவனத்தை வாங்குகிறது பேஸ்புக்!

அக்குலஸ் விஆர் (Oculus VR) நிறுவனத்தை வாங்குகிறது பேஸ்புக்!

597
0
SHARE
Ad

facebookமார்ச் 27  – உலகின் முன்னணி நட்பு ஊடகமான பேஸ்புக், அக்குலஸ் விஆர் ( Oculus VR) நிறுவனத்தை 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க இருக்கின்றது.

மெய்நிகர் (Virtual Reality) கண்ணாடிகள் மற்றும் கருவிகளை உருவாக்கும், இந்த அக்குலஸ் விஆர் நிறுவனமானது, தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆகின்றது.

பேஸ்புக் முதல் முறையாக ஒரு வன்பொருள் (Hardware) தயாரிக்கும் நிறுவனத்தை வாங்க இருப்பது தொழிநுட்ப ஆர்வலர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுகர்பெர்க் கூறியதாவது :-

“மக்களின் அன்றாட வாழ்க்கை கற்பனைகளும், எதார்த்தங்களும் நிறைந்ததாக மாறி வருகின்றது. அவர்களின் கற்பனைகளை மேம்படுத்தும் வகையில் பேஸ்புக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கான வகுப்புகள், மருத்துவ பரிசோதனைகள், வர்த்தக சந்திப்புகள் உட்பட அனைத்து விஷயங்களும் மக்கள் இருந்த இடத்திலேயே பெரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

‘மெய்நிகர்’ (Virtual Reality) கண்ணாடிகளை உருவாக்கும் அக்குலஸ் நிறுவனம் தற்சமயம் அதனை கணினி விளையாட்டுகளில் பயன்படுத்தி வருகிறது. இவ்வகை கண்ணாடிகளை அணிந்து கொண்டால் கற்பனை உலகத்தில் நாம் இருப்பது போன்ற மாயநிலையை ஏற்படுத்துவதாக பயனாளர்கள் கூறுகின்றனர்.

பேஸ்புக் நிறுவனமானது, இந்த மெய்நிகர் (Virtual Reality) தொழில்நுட்பத்தைக் கொண்டு  தன் சேவை மற்றும் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகக் கருதப்படுகிறது.

சமீபத்தில் முன்னணி செயலியான ‘வாட்ஸ்அப்’ (Whatsapp)  ஐ 19 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

‘மெய்நிகர்’ (Virtual Reality) கண்ணாடிகளை கீழ்காணும் காணொளி வழி காணலாம்.