Home தொழில் நுட்பம் யூ-டியூப் -க்கு போட்டியாக யாஹூ களமிறங்குகிறது!

யூ-டியூப் -க்கு போட்டியாக யாஹூ களமிறங்குகிறது!

593
0
SHARE
Ad

youtube-logo_large_verge_medium_landscapeமார்ச் 31 – பிரபல காணொளி ஊடகமான யூ-டியூப் (You Tube) இணையத்தளத்திற்குப் போட்டியாக யாஹூ(Yahoo) நிறுவனமும் காணொளிக் காட்சிகளை அறிமுகப்படுத்த இருப்பதாகத் தகவல்கள் வெளி வருகின்றன.

சமீபத்திய நாட்களில் யூ-டியூப் இணையதளம் மூலமாக சந்தாதாரர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதில்லை. இதனைக் கருத்தில் கொண்டு யாஹூ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மரிஷா மேயர் யூ-ட்யூப் -க்கு போட்டியாக யாஹூ (Yahoo) வின் புதிய காணொளிக் காட்சிகளைக் கொண்ட இணையதளத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகத் தெரிகின்றது.

இதுகுறித்து மரிஷா மேயர் யூ-ட்யூப் நிறுவனத்தின் பெரிய சந்ததாரர்களையும், அதிகாரிகளையும் மறைமுகமாக அணுகி வருகிறார் என்றும் செய்திகள் கசிகின்றன.

#TamilSchoolmychoice

மேலும் யூ-டியூப் -ஐ விட அதிகமான விளம்பர வருவாய் விகிதங்களை, சந்ததாரர்களுக்கு தர தாயராக இருப்பதாக யாஹூ அறிவித்துள்ளது.

காணொளிக் காட்சிகளை நிர்வகிக்கவும், செயல்படுத்தவும் விமியோ (Vimeo) போன்ற சில நிறுவனங்களை யாஹூ வாங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.