Home உலகம் உக்ரைனில் இனி புதிய இராணுவ நடவடிக்கைகள் இல்லை – ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் நம்பிக்கை!

உக்ரைனில் இனி புதிய இராணுவ நடவடிக்கைகள் இல்லை – ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் நம்பிக்கை!

525
0
SHARE
Ad

Putin130912உக்ரைன், மார்ச் 31 – ரஷ்யாவின் நெருக்கடி காரணமாக உக்ரைன், கிரமியாவில் இருந்த தனது இராணுவ மற்றும் அரசு அதிகாரங்களை முழுவதுமாக பின்வாங்கியது.

இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் புதிய இராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா தொடராது என்று ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின், ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனிடம் தொலைபேசியில் உறுதியளித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பான் கீ மூன், “உக்ரைன் மற்றும் ரஷ்ய தலைவர்கள் கடும் நடவடிக்கைகளைத் தவிர்த்து பதற்றத்தை தணிக்கும் வகையில் உடனடியாக நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

#TamilSchoolmychoice

மேலும் உக்ரைனால் தொடங்கப்பட்ட பிரச்னை, தற்போது அதையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. பிரச்னை தொடங்கியபோதே, ஐ.நா.வின் அடிப்படை நெறிமுறைகளின்படி பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் ரீதியான தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும்  என்று தெரிவித்துள்ளார்

இதனிடையே, அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அதிபர் ஒபாமா தொலைபேசி மூலம் புடினுடன் சனிக்கிழமை பேசியுள்ளார்.

அப்போது, உக்ரைனின் எல்லையில் ரஷ்ய படைகளைக் குவித்து வருவதால் அந்நாட்டில் நிலவும் பதற்றத்தை தணிக்க வேண்டும். அணுபாதுகாப்பு மாநாட்டின் போது,

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் குறித்து மேற்கொண்ட ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும்.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக ரஷ்யா பதிலளிக்க வேண்டும். உக்ரைனில் அமைதி நிலவ அந்நாட்டு அரசுக்கும், அதன் மக்களுக்கும் அமெரிக்கா உறுதுணையாக இருக்கும்” என்று தெரிவித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது