Home இந்தியா இந்தியத் தேர்தல் நாளை தொடங்குகிறது – அசாம், திரிபுராவில் முதல் கட்டத் தேர்தல்

இந்தியத் தேர்தல் நாளை தொடங்குகிறது – அசாம், திரிபுராவில் முதல் கட்டத் தேர்தல்

414
0
SHARE
Ad

Rahul - Modi 440 x 215ஏப்ரல் 6 – உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருக்கும் இந்தியாவின் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நாளை முதல் தொடங்குகின்றது. முதல் கட்ட வாக்கெடுப்பு நாளை ஏப்ரல் 7ஆம் தேதி அசாம், திரிபுரா மாநிலங்களில் 6 நாடாளுமன்றத் தொகுதிகளில் தொடங்குகிறது.

#TamilSchoolmychoice

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.

இந்த இரண்டு மாநிலங்களும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களாகும். மிகவும் பின்தங்கிய உட்கட்டமைப்பு வசதிகளோடு விளங்கும் மாநிலங்கள் இவையாகும்.

அசாமில், காங்கிரஸ், பாரதிய  ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ், அசாம் கனபரிஷத், ஆம் ஆத்மி கட்சி போன்ற கட்சிகளின் பல்முனைப்போட்டி நிலவுகிறது.

மொத்தமுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவுகின்றது.

நாளை தொடங்கும் தேர்தல் எதிர்வரும் மே 12ஆம் தேதி வரை தொடரும். வாக்குப் பதிவு 9 கட்டங்களாக நடைபெறுகின்றது.

இறுதிக் கட்ட வாக்குப் பதிவுகள் முடிந்ததும், வாக்குகள் மே 16ஆம் தேதி காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்திய வரலாற்றில் இதுவே நீண்ட காலத்தை எடுத்துக் கொள்ளும் பொதுத் தேர்தலாகும்.

அடுத்த இந்தியப் பிரதமரை முடிவு செய்யும் தேர்தலாகவும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அமையும்.

பிரதமர் வேட்பாளராக பாஜக, நரேந்திர மோடியை முன்னிறுத்தி பிரச்சாரத்தில் இறங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியோ இதுவரை தனது பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

ஆனால், காங்கிரஸ் கட்சி வென்றால், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி பிரதமராவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.