Home உலகம் ஈரான் தன் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்து ‘பி5பிளஸ்1’ நாடுகளுடன் பேச்சுவார்த்தை!

ஈரான் தன் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்து ‘பி5பிளஸ்1’ நாடுகளுடன் பேச்சுவார்த்தை!

549
0
SHARE
Ad

talks-in-genevaஈரான், ஏப்ரல் 10 – ஈரானின் அணு ஆயுதத்திட்டங்கள் குறித்து உலக அளவில் எதிர்ப்புகள் வழுத்து வரும் நிலையில், இது குறித்த முடிவினை எடுக்க ஈரான் மற்றும் வல்லரசு நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் ஈரான் மற்றும் ‘பி5பிளஸ்1’ யெற்று அழைக்கப்படும் நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 6 நாடுகளின் தூதர்கள் ஜெனீவாவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் ஈரான் 5 சதவீத அளவுக்கு மட்டுமே யுரேனியம் செறிவூட்டும் என்பதால் அதை சர்வதேச நிபுணர்கள் கண்காணிக்கலாம் என தற்காலிக உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டது.

#TamilSchoolmychoice

தற்போது யுரேனியம் செறிவூட்டுவது, மின்சார உற்பத்திக்காகத்தான் என கூறி வரும் ஈரான் தனது அணு உலைகளை மூடுவதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரான் மற்றும் ‘பி5பிளஸ்1’ நாடுகளின் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் உள்ள ஐ.நா. வளாகத்தில் நேற்று தொடங்கியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக ஈரான் வெளியுறவு துணை மந்திரி அப்பாஸ் ஆராக்சி கூறுகையில், ‘‘கடந்த கூட்டங்களின் போது விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் இப்போது மீண்டும் விவாதிக்கப்படும், குறிப்பாக ஈரான் யுரேனியம் செறிவூட்டுதல், ஆராக் கனநீர் அணு உலை போன்றவை பற்றியும் விவாதிக்கப்படும்” எனவும் கூறியுள்ளார்.

மேலும் இப்பேச்சுவார்த்தை மூலம் ஈரான் மற்றும் ‘பி5பிளஸ்1’ நாடுகளுக்கிடையே அணுதிட்டங்கள் தொடர்பாக நிரந்தர உடன்படிக்கைக்கு வரலாம் என கூறப்படுகிறது.