Home இந்தியா மோடி பேச்சுக்கு கருணாநிதி கடும் கண்டனம்!

மோடி பேச்சுக்கு கருணாநிதி கடும் கண்டனம்!

601
0
SHARE
Ad

narendra-modiசென்னை, ஏப்ரல் 15 – தமிழக மக்களின் வருத்தத்தை சம்பாதிக்கும் வகையில் மோடி பேச்சு இருந்ததாக கருணாநிதி குற்றம் சாட்டினார். பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தமிழகம் வந்து நடிகர் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசினார்.

பின்பு சென்னையில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது நரேந்திர மோடி கூறியதாவது, தமிழகத்தில் திமுக கட்சியும், அதிமுக கட்சியும் இரட்டை வேடம் போடுகிறது. இந்த இரண்டுக் கட்சிகளும் மக்களை ஏமாற்றி ஊழல் செய்யும் கட்சிகள் என கடுமையாக தாக்கி பேசினார் மோடி.

இதற்கு திமுக தலைவர் கருணாநிதி கூறியதாவது, திமுகவுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என மோடி பேசியது மிக தவரான குற்றச்சாட்டு. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என கருணாநிதி கண்டனம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், ரஜினிகாந்த்- மோடி சந்திப்பு பற்றி கேட்டதற்கு, அவர்கள் சந்திப்பு பற்றி எந்தக் கருத்து கூற நான் விரும்பவில்லை என கருணாநிதி தெரிவித்தார்.