Home இந்தியா பா.ஜ.க-வை ஆதரித்து பவன் கல்யாண் பிரச்சாரம்!

பா.ஜ.க-வை ஆதரித்து பவன் கல்யாண் பிரச்சாரம்!

581
0
SHARE
Ad

pawankalyan_1பெங்களூர், ஏப்ரல் 16 – மத்திய அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவியின் தம்பி, நடிகர் பவன் கல்யாண், சமீபத்தில் ‘ஜனசேனா’ என்ற கட்சியை தொடங்கினார். தனது கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு, காங்கிரசை அடியோடு அழிப்பேன் என்றும் கூறினார்.

இந்த நிலையில், பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய அவர், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது என்றும், பா.ஜ.கவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து தனது பிரச்சாரத்தை பவன் கல்யாண், கர்நாடக மாநிலத்தில் தொடங்குகிறார்.

இன்று கர்நாடாகாவில் பிரச்சாரம் செய்ய உள்ள அவர், ஐதராபாத்தில் இருந்த் ஹெலிகாப்டர் மூலம் ரெய்ச்சூர் செல்கிறார். அங்கு பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். பின்னர் கோலார், குல்பர்கா ஆகிய இடங்களில் பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

#TamilSchoolmychoice

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இங்கு நடிகர் சிரஞ்சீவி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து காங்கிரசுக்கு ஆதரவு திரட்டினார். சிக்பல்லாபூர், ரெய்ச்சூர், கோலார் ஆகிய இடங்களில் அவர் பேசினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது தம்பியான நடிகர் பவன் கல்யாண் பிரச்சாரத்தை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.