Home இந்தியா ராஜிவ் கொலை வழக்கு: 7 தமிழர் விடுதலை குறித்து இன்று தீர்ப்பு!

ராஜிவ் கொலை வழக்கு: 7 தமிழர் விடுதலை குறித்து இன்று தீர்ப்பு!

577
0
SHARE
Ad

raajivuடெல்லி, ஏப்ரல் 25 – ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தண்டனையை ஆயுள் தண்டனையாக்கியது உச்சநீதிமன்றம். அத்துடன் இவர்களது விடுதலை தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் கூறியது.

இதைத் தொடர்ந்து இந்த மூவர் மற்றும் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 4 பேர் என மொத்தம் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

#TamilSchoolmychoice

மேலும், இது தொடர்பாக மத்திய அரசிடம் கருத்தும் கேட்கப்பட்டது. ஆனால் தமிழக அரசுக்கு பதில் தெரிவிக்காமல் மத்திய அரசு உச்சநீதிமன்றத்துக்குப் சென்றது. இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று முடிவடைந்துவிட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சதாசிவம் இன்றுடன் ஓய்வு பெற இருக்கிறார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பும் வழங்கப்படும் என்று ஏற்கெனவே தலைமை நீதிபதி சதாசிவம் கூறியிருந்தது சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது. 7 தமிழர் விடுதலை தொடர்பான இன்றை தீர்ப்பை உலகத் தமிழர்கள் ஆணைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.