Home நாடு புக்கிட் குளுகோரில் மே 25-ஆம் தேதி இடைத் தேர்தல்!

புக்கிட் குளுகோரில் மே 25-ஆம் தேதி இடைத் தேர்தல்!

574
0
SHARE
Ad

Yusof2புத்ராஜெயா, ஏப்ரல் 25 – அண்மையில் சாலை விபத்து ஒன்றில் கர்ப்பால் சிங் அகால மறைவு அடைந்தது காரணமாக புக்கிட் குளுகோரில் மே 25-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

2013 பொதுத் தேர்தலில் அதிகப் பெரும்பான்மையில் கர்ப்பால் சிங் தேமு வேட்பாளரைத் தோற்கடித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த இடைத் தேர்தலுக்கு எதிர்வரும் மே 12-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும்.

வேட்புமனுத் தாக்கல் டேவான் ஸ்ரீ பினாங்கில் வழங்கப்பட வேண்டும் என்றும் இங்கேயே வாக்குகளும் எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் முகமட் யூசோப் கூறினார்.

#TamilSchoolmychoice

இத்தேர்தலுக்கான செலவு சுமார் 20 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த இடைத் தேர்தலில் ஜசெக சார்பாக கர்ப்பால் சிங்கின் மகன் ராம் கர்ப்பால் அல்லது மகள் சங்கீத் கவுர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.