Home நாடு ஓரினப் புணர்ச்சி வழக்கு : மேல்முறையீட்டு ஆவணங்களை அன்வார் சமர்ப்பித்தார்

ஓரினப் புணர்ச்சி வழக்கு : மேல்முறையீட்டு ஆவணங்களை அன்வார் சமர்ப்பித்தார்

522
0
SHARE
Ad

Datuk-Seri-Anwar-Ibrahim-610x356கோலாலம்பூர், ஏப்ரல் 25 தனது ஓரினப்புணர்ச்சி வழக்கிற்கான மேல்முறையீட்டு ஆவணங்களை அன்வார் இப்ராஹிம் இறுதி நாளான நேற்று தனது வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

#TamilSchoolmychoice

மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் கடந்த மார்ச் 7ஆம் தேதி 5 ஆண்டு சிறைத் தண்னை விதிக்கப்பட்ட அன்வார் இப்ராஹிம் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

அவரது மேல் முறையீடு வழக்கை கவனித்து வந்த கர்ப்பால்சிங் மரணமடைந்ததைத் தொடர்ந்து அன்வார் கால நீட்டிப்பு அவகாச மனு ஒன்றை நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

ஆனால் நீதிமன்ற பதிவதிகாரி கால அவகாசம் வழங்க மறுத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து மேல்முறையீட்டுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க இறுதி நாளான நேற்று 35 காரணங்களை கொண்ட மேல்முறையீட்டு மனுவை அன்வார் சார்பாக அவரது வழக்கறிஞர்கள் சமர்ப்பித்தனர்.

தனது மேல்முறையீட்டு மனுவில் தன் மீது விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என கோரியிருக்கும் அன்வார் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தவறுதலான கண்ணோட்டத்துடன் தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிபதிகள் தன்மீது தவறான கண்ணோட்டத்துடன் இந்த வழக்கை அணுகியிருக்கின்றனர் என்று அன்வார் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு சாதகமான நிபுணர்களின் அறிக்கைகளையும் நீதிபதிகள் நிராகரித்திருப்பது தவறான நடைமுறையாகும் என்று அன்வார் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.