கோலாலம்பூர், ஏப்ரல் 27 – நேற்று கோலாலம்பூர் வந்தடைந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு நல்கப்பட்டது.
பின்னர் அவர், 21 குண்டுகள் முழங்க, தனக்கு வழஙப்பட்ட மரியாதை அணிவகுப்பையும் பார்வையிட்டார்.
ஒபாமாவையும் மலேசிய மாமன்னர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாசாம் ஷாவும், பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் இணைந்து வரவேற்றனர்.
துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்டின் யாசினும் உடன் இருந்தார்.
இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டவுடன், அரச மலாய் இராணுவத்தைச் சேர்ந்த 107 அதிகாரிகள் வழங்கிய மரியாதை அணிவகுப்பைப் பார்வையிட்டார்.
இந்த மரியாதை அணிவகுப்பில் 21 குண்டுகள் முழங்கப்பட்டன.
மலேசிய அமைச்சரவை உறுப்பினர்கள் பின்னர் ஒபாமாவுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் மற்ற நாடுகளின் தூதர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இன்று ஒபாமா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.