Home கலை உலகம் படத்தில் இருந்து நீக்கியதால் தயாரிப்பாளர்களுக்கு அமலா பால் கண்டனம்!

படத்தில் இருந்து நீக்கியதால் தயாரிப்பாளர்களுக்கு அமலா பால் கண்டனம்!

685
0
SHARE
Ad

amalapaulசென்னை, மே 2 – டோலிவுட் படத்திலிருந்து நீக்கப்பட்டதால் கோபமடைந்த அமலா பால், பட தயாரிப்பாளர், இயக்குனரை திட்டியுள்ளார். அமலா பால், இயக்குனர் விஜய் காதல் திருமணம் ஜூன் மாதம் நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது.

திருமணம் பற்றி சொல்லாமல் “வஸ்தா நீ வேணுகா” என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அமலா பால் ஒப்புக்கொண்டார். பத்திரிகைகளில் அமலாபால் காதல் திருமணம் பற்றி செய்தியை படித்ததும் அப்பட தயாரிப்பாளர், இயக்குனர் அதிர்ச்சியடைந்தனர்.

காதலை மையமாக வைத்து இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் முடிவதற்குள் அமலாவுக்கு திருமணம் முடிந்துவிடும். அது படத்துக்கு ஆபத்தாகி நஷ்டத்தை ஏற்படுத்திவிடும் என்று கூறி அமலாவை படத்தில் இருந்து நீக்கினார்கள்.

#TamilSchoolmychoice

இதையறிந்து அமலா பால் கோபமடைந்தார். அப்பட தயாரிப்பாளர், இயக்குனரை போனில் அழைத்து திட்டிவிட்டார். இதுபற்றி அமலா கூறும்போது, ஏப்ரல் மாதமே படத்தை தொடங்குவதாக கூறினார்கள்.

அதற்கு ஏற்ப கால்ஷீட் ஒதுக்கி தந்தேன். ஆனால் அப்படி செய்யவில்லை. தற்போது ஜூன் மாதம்தான் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டிருப்பதாக கூறுகிறார்கள்.

என்னுடைய கால்ஷீட்டை அவர்கள் வீணடித்துவிட்டார்கள். அவர்களை போனில் அழைத்து படத்திலிருந்து நானே வெளியேறுவதாக கூறிவிட்டேன்.

ஜூன் மாதம் என்னால் படப்பிடிப்பில் நடிக்க முடியாது என்றார். கால்ஷீட் வீணாக்கிய தயாரிப்பாளர், இயக்குனரை அமலா பால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.