Home உலகம் நைஜீரியா மாணவிகளை மீட்க ஒபாமா முடிவு!

நைஜீரியா மாணவிகளை மீட்க ஒபாமா முடிவு!

605
0
SHARE
Ad

nigeriaஅபுஜா, மே 8 – நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் கடத்திச் சென்ற பள்ளி மாணவிகளை பாலியல் அடிமைகளாக்குவோம் என்று காணொளிக்காட்சி மூலம் மிரட்டல் விடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து அதிபர் குட்லக் ஜோனாதன் அமெரிக்காவின் உதவியை நாடினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம், தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த வடக்கு நைஜீரியாவில், ஹில்லி ருவோஷா என்ற கிராமத்தில் 2 வாகனங்கள் மற்றும் லாரிகளில் தீவிரவாதிகள் புகுந்தனர். வீடுகளுக்குள் இருந்தவர்களை, துப்பாக்கி முனையில் வெளியே இழுத்து வந்தனர். பின்னர் இவர்களில் 8 சிறுமிகளை கடத்தி சென்றனர். இவ்வாறாக போக்கோ ஹரம் தீவிரவாதிகளின் அட்டூழியங்கள் பெருகிவரும் நிலையில் அமெரிக்கா, நைஜீரியாவிற்கு உதவ முன்வந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில், ‘‘கடத்தப்பட்ட மாணவிகளை பாலியல் அடிமைகளாக விற்க போவதாக தீவிரவாதிகளின் தலைவர் பேசிய பேச்சு இதயத்தை நொறுக்குவது போல் உள்ளது. சர்வதேச அளவில் மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் இதுபோன்ற கொடூரத்தை சகித்து கொள்ள முடியாது. எனவே கடத்தப்பட்ட மாணவிகளை மீட்க அமெரிக்கா, ராணுவ வீரர்கள் அடங்கிய குழுவை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது’’ என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், போக்கோ ஹரம் தீவிரவாதிகளுக்கு ஒபாமாக கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.