Home உலகம் “உண்மையான அசல் துணைக் கோளப் படங்களை வெளியிடுங்கள்” – எம்எச்370 பயணிகளின் உறவினர்கள் அறைகூவல்

“உண்மையான அசல் துணைக் கோளப் படங்களை வெளியிடுங்கள்” – எம்எச்370 பயணிகளின் உறவினர்கள் அறைகூவல்

456
0
SHARE
Ad

Relatives of passengers of flight MH370பெய்ஜிங்,  மே 10 – காணாமல் போன எம்எச் 370 விமானம் தேடுதல் குறித்த அசலான துணைக் கோளப் படங்களை மலேசிய அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று காணாமல் போன விமானத்தின் பயணிகளின் உறவினர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.

இதன்மூலம் இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட நிபுணர்கள் மேலும் விரிவான ஆய்வுகள் நடத்த முடியும் என்றும் அவர்கள் கூறினர்.

தேடுதல் பணியில் கறுப்பு பெட்டியும் கிடைக்காத நிலையில் – விமானம் விழுந்ததாக சொல்லப்படும் பகுதியில் ஒரு துண்டு உடைந்த பாகம் கூட கிடைக்காத நிலையில் –  இந்த விவகாரம் மற்ற மூன்றாம் தரப்பினரின் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்தப் பயணிகளின் உறவினர்கள் கூறினர்.

#TamilSchoolmychoice

இந்த பயணிகளின் உறவினர்களின் பிரதிநிதிகள் சிலர் நேற்று பெய்ஜிங் நகரிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.

வாய்ஸ் 370

சுமார் 800 குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட இந்தப் பயணிகளின் உறவினர்கள் “370 குரல்” (வாய்ஸ் 370)  என்று தங்களை அழைத்துக் கொள்ள தொடங்கியுள்ளனர்.

இவர்கள் தங்களின் அறைகூவலை மலேசிய பிரதமர் நஜீப் துன் ரசாக், ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட், சீன அதிபர் ஷி சின் பெங் ஆகிய மூவருக்கும் அனுப்பிய ஒரு திறந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு வார காலமாக தேடுதல் பணிகள் குறித்து தங்களுக்கு எந்த வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், காணாமல் போன விமான பயணிகளுக்கான நஷ்ட ஈடு தொகையை சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனங்கள் எந்தவித நடைமுறை சிக்கல்கள் இன்றி உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்பட மலேசிய அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

படம் – EPA