Home உலகம் உக்ரைன் விவகாரத்தில் திருப்பம் – ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

உக்ரைன் விவகாரத்தில் திருப்பம் – ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

497
0
SHARE
Ad

russyaடோன்ஸ்க், மே 12 – “உக்ரைன் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு, அந்த நாட்டு அரசாங்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால், கடும் விலைவுகளை சந்திக்க நேரிடும்’ என, ரஷ்யாவுக்கு, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவில், சமீபத்தில் கிளர்ச்சி ஏற்பட்டது. அங்கு இருந்த ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள், உக்ரைன் அரசுக்கு எதிராக, போராட்டங்களை நடத்தினர். பின், கிரிமியாவை, ரஷ்யாவுடன் இணைப்பதற்கான பொது ஓட்டெடுப்பு நடத்தினர்.

இதற்கு, அங்கு வசித்த பெரும்பாலானோர் ஆதரவு அளித்ததால், உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியா, சமீபத்தில், ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது. இதனால், ரஷ்யா மீது, அமெரிக்கா, கடும் அதிருப்தியில் உள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் அதிகமாக வசிக்கும் ரஷ்யர்களும், திடீரென கிளர்ச்சியில் இறங்கியுள்ளனர். இவர்கள், அரசுக்கு எதிராக, தொடர் போராட்டங்களை நடத்தி வருவதுடன், கிழக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், உக்ரைனிலிருந்து பிரிந்து, தனி நாடாகச் செயல்படப் போவதாகக் கூறி, அதற்காக, நேற்று, பொது ஓட்டெடுப்பையும் நடத்தினர். இதற்காக, கிழக்கு பகுதியில் உள்ள டோன்ஸ்க் மற்றும் லகான்ஸ்க் ஆகிய நகரங்களில், முக்கிய இடங்களில், கிளர்ச்சியாளர்கள் சார்பில், ஓட்டுச் சாவடி கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த கிளர்ச்சியாளர்களின் பின்னணியில், ரஷ்ய அரசு செயல்படுவதாக, அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கருதுகின்றன. இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், ஜென் ப்சாகி கூறியதாவது. “உக்ரைனின் உள் விவகாரங்களில் தலையிட்டு, அந்த நாட்டு அரசாங்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையை, ரஷ்யா, கைவிட வேண்டும்.

இந்த நடவடிக்கையை, ரஷ்யா தொடர்ந்தால், அதற்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். இந்த விவகாரத்தில், சர்வதேச விதிமுறைகளை, ரஷ்யா பின்பற்ற வேண்டும்” என அவர் கூறினார். ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளும், ரஷ்யாவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.