Home வாழ் நலம் உடல்நலத்திற்கு பயன்தரும் வாழைப்பழம்!

உடல்நலத்திற்கு பயன்தரும் வாழைப்பழம்!

1822
0
SHARE
Ad

bananaமே 14 – உடலுக்கு நன்மை செய்யும் உணவுகளில் வாழைப்பழத்தை விடச் சிறந்த ஒன்றைக் கூறுவது கடினம். அவை அதிக சுவையும் குறைந்த விலையும் கொண்டவை. வாழைப்பழம் வருடம் முழுவதும் கிடைக்கக் கூடியவை.

வாழை மரத்தின் கனி, தண்டு, பூ, இலைகள் என்று ஒட்டுமொத்த மரமே மனித இனத்திற்குப் பயன் தருபவை. சில உணவு வகைகளை ஆவியில் வேக வைத்து சமைக்க வாழை இலை பயன்படுகிறது.

வாழைப்பழம் தனியாக சுவை தருவதோடு, பழக்கலவைக்குக் கூடுதல் சுவை சேர்க்கிறது. வாழைத்தண்டும், வாழைப்பூவும் பல நாடுகளின் உணவு வகைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

#TamilSchoolmychoice

இப்பழத்தில் வைட்டமின் பி6 மற்றும் பொட்டாசியம், மாங்கனீசு போன்ற கனிமச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இப்போது உடல்நலம் காப்பதில் வாழைப்பழத்தின் முக்கியமான பயன்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

bananaஉடலுக்கு புத்துணர்ச்சியளிக்கும்:

சராசரியாக 105 கலோரிகள் கொண்ட வாழைப்பழம் உடலுக்கு உடனடியாக அற்புதமான புத்துணர்ச்சியளிக்கும். வாழைப்பழம் உடற்பயிற்சிக்குப் பின் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற உணவு. பொதுவாக உடற்பயிற்சி நேரத்தில் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு மிகவும் குறைந்துவிடுவதால், அந்த நேரத்தில் வாழைப்பழம் உடனடியாகப் புத்துணர்ச்சியளிக்கிறது.

தசைப்பிடிப்பை விரட்டும்:

எப்பொழுதாவது கடின உடற்பயிற்சி செய்து தசைப்பிடிப்பின் வேதனையை அனுபவித்திருக்கிறீர்களா? இரவு நேரங்களில் கால்களில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு வலியினால் அவதிப்பட்டு தூக்கத்திலிருந்து விழித்து எழுந்திருக்கிறீர்களா? உங்களுக்கான சிறந்த மருந்து வாழைப்பழம் தான்.

மக்னீசியமும், பொட்டாசியமும் நிறைந்த வாழைப்பழம் உங்கள் உடலுக்கு கனிமச்சத்துக்களை அளித்துப் புத்துணர்வூட்டுகிறது. தசைகளை நன்கு தளர்வாக்கி தசைப்பிடிப்பிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.

bananaஇரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்:

அதிக பொட்டாசியமும் குறைவான அளவு சோடியமும் கொண்ட வாழைப்பழம் இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைக்க உதவுகிறது. உடலில் நீர்ச்சத்தை சமநிலையில் வைக்க உதவுவதோடு உடலிலிருந்து நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வராமல் காக்கிறது.

நெஞ்செரிச்சலைக் குறைக்கும்:

வயிற்றில் அமிலத்தன்மையைக் குறைக்கும் சக்தி வாழைப்பழத்திற்கு அதிகம். வயிற்றின் உட்பக்க சுவரை ஒரு தடுப்புப் பூச்சு கொண்டு பாதுகாத்து அமிலம் சுரப்பதைக் குறைத்து, அல்சர் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

bananasமலச்சிக்கலை குணமாக்கும்:

வாழைப்பழமும், அதன் தண்டும், அவற்றில் நிரம்பியுள்ள நார்ச்சத்து மற்றும் பெக்டின் மூலம் குடல் இயக்கத்தை எளிதாக்கி மலச்சிக்கலைக் குறைக்கின்றன. வாழைத்தண்டின் சாற்றினைப் பிழிந்து குடிப்பதும் பயனளிக்கும்.

தாம்பத்திய வாழ்க்கை சிறப்படையும் ஆணுறுப்பின் வடிவம் கொண்ட வாழைப்பழம் உண்மையிலேயே அதற்குப் பெரிதும் உதவும் உணவாகும். பாலுணர்வுக் கிளர்ச்சியூட்டும் தன்மை வாழைப்பழத்தின் வடிவத்தில் மட்டுமல்லாமல், அதன் உள்ளடக்கத்திலும் உள்ளது.

பாலியல் ஹார்மோன்களை அதிகரிக்கச் செய்யும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதோடு, ஆணின் பாலியல் உணர்வுகளையும் அது தூண்டுகிறது. கலவிக்குப் பிறகு உண்டாகும் பரவச நிலைக்குக் காரணமான செரடோனின் அளவையும் அது கட்டுப்படுத்துகிறது.