Home உலகம் அண்டை நாடுகளின் அமைதியைக் குலைக்கிறது சீனா – வியட்நாம் பிரதமர் கவலை! 

அண்டை நாடுகளின் அமைதியைக் குலைக்கிறது சீனா – வியட்நாம் பிரதமர் கவலை! 

929
0
SHARE
Ad

Nguyen-Tan-Dungஹனோய், மே 22 – வியட்நாம் கடல் பகுதிகளில் சீனாவின் அத்துமீறல் குறித்து வியட்நாம் பிரதமர் என்குயன் டான் டங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தென்சீனக் கடல் பகுதியில் வியட்நாமுக்கு அருகே 120 நாட்டிக்கல் மைல் தொலைவில் எண்ணெய் வளம் பற்றிய ஆய்வுப் பணிகளை சீனா மேற்கொண்டு வருகின்றது. இதற்காக சீனா சில கப்பல்களை அந்த தீவுக்கு அனுப்பியது. சீனாவின் இந்த செயலுக்கு, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்நிலையில், சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து டான் டங் மற்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அகினோ ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பிப்பு பற்றி டான் டங் கூறுகையில், “எண்ணை வள ஆராய்ச்சி என்ற பெயரில் சீனா சர்வதேச சட்ட விதிகளை மீறி நடந்து கொள்கின்றது. எனவே, சீனாவின் இந்த அத்துமீறலை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும்.”

#TamilSchoolmychoice

“தென் சீனக் கடலின் எண்ணெய் படுகையை சுற்றி சீனா தனது ஆயுதம் தாங்கிய கப்பலை நிறுத்தியுள்ளது. இதன் மூலம் அமைதி, நிலைத்தன்மை, கடல் பாதுகாப்பு, தடையற்ற கடற்பயணம் ஆகியவற்றுக்கு சீனா பெரும் அச்சுறுத்தல் அண்டை நாடுகளுக்கு ஏற்படுத்துகின்றது” என்று வருத்தம்  தெரிவித்துள்ளார்.