Home கலை உலகம் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி போட்டி: சிறப்பு விருந்தினராக தீபிகா படுகொனே!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி போட்டி: சிறப்பு விருந்தினராக தீபிகா படுகொனே!

519
0
SHARE
Ad

Deepika Padukoneமும்பை, மே 23 – ஐரோப்பிய யூனியன் கால்பந்து கூட்டமைப்பு சார்பில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் மற்றும் அட்லெட்டிகோ மாட்ரிட் ஆகிய இரு அணிகள் மோத இருக்கின்றன.

ஸ்பெயின் நாட்டின் லிஸ்பன் நகரில் நடைபெறும் இறுதி போட்டி வருகிற சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகை தீபிகா படுகொனே கலந்து கொள்கிறார்.

இது குறித்து தீபிகா கூறுகையில், “சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.  ஐரோப்பிய நாடுகளின் இரு சிறந்த அணிகள் பங்கு பெற உள்ள கடும் போட்டி நிலவும் ஆட்டத்தை காண நான் ஆவலாக உள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice