Home உலகம் ஜப்பானின் புகுஷிமா அணு உலைக்கு அடியில் பனிச்சுவர் கட்டும் திட்டம்!

ஜப்பானின் புகுஷிமா அணு உலைக்கு அடியில் பனிச்சுவர் கட்டும் திட்டம்!

632
0
SHARE
Ad

fugushimaடோக்கியோ, ஜூன் 3 – ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரலைகளின் தாக்கத்தினால் புகுஷிமா அணுமின் நிலையம் பலத்த சேதம் அடைந்தது.

செயல்படாத மூன்று அணு உலைகளில் இருந்த வெளியேறும் கதிரியக்க நீர் பூமியின் நிலத்தடி நீருடன் மட்டும் அல்லாது கடலிலும் சென்று கலப்பதனால் பெரும் அழிவை ஏற்படுத்தும் என்ற அச்சம் அந்நாட்டு மக்களிடையே இருந்து வருகின்றது.

இந்த நிலையைக் கட்டுப்படுத்த பொறுப்பு ஏற்றிருக்கும் டெப்கோ நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றது. இந்தப் பாதுகாப்பு பணியின் ஒரு கட்டமாகவே புகுஷிமாவின் நிலத்தடியில் பனி சுவர் கட்டும் திட்டம் கடந்த வருடம் ஆலோசிக்கப்பட்டது.

இந்த நடைமுறை நீர்நிலைகள் அருகில் நிலத்தடி சுரங்கங்களின் கட்டுமானப் பணிகளின்போது பயன்படுத்தப்படும் ஒரு தடுப்பு முறையாகும். இதேபோன்று அணுமின் நிலையத்தின் அடியில் கட்டப்படும் பனி தடுப்பு சுவர் நிலத்தடி நீருடன் கதிரியக்க நீர் கலக்காமல் நேரடியாக கடலில் சென்று கலக்கும் என்று குறிப்பிடப்பட்டது.

ஜப்பானின் தேசிய கண்காணிப்பு அணு ஒழுங்குமுறை ஆணையம் டெப்கோ நிறுவனத்திற்கு கடந்த வாரம்தான் இதற்கான ஒப்புதலை அளித்தது. எனினும், இத்தகைய நடைமுறை இதற்கு முன்னால் செய்யப்படவில்லை என்றும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், புகுஷிமா ஆலையின் கதிரியக்க வெளியேற்றத்தை முற்றிலும் கட்டுப்படுத்துவது என்பதற்கு பல வருடங்கள் பிடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு கருதி அங்குள்ள சில குடியேற்றங்கள் கைவிடப்படவேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.