Home அவசியம் படிக்க வேண்டியவை அமெரிக்க ஆப்பிள் நிறுவன மாநாட்டில் டிம் குக் – முத்து நெடுமாறன்

அமெரிக்க ஆப்பிள் நிறுவன மாநாட்டில் டிம் குக் – முத்து நெடுமாறன்

610
0
SHARE
Ad

Muthu Developers Conf 500 x 300

சான் பிரான்சிஸ்கோ, ஜூன் 3 – உலகம் எங்கும் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களுக்கான அனைத்துலக மேம்பாட்டாளர் மாநாடு நேற்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் தொடங்கியது.

இந்த மாநாட்டில் செல்லியல் சார்பாக செல்லினம், செல்லியல் மற்றும் முரசு எழுத்துருக்களின் வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் கலந்து கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

உலகப் புகழ் பெற்ற இந்த மாநாட்டில் கடந்த 12 ஆண்டுகளாக முத்து நெடுமாறன் தொடர்ந்து கலந்து கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற மாநாட்டின் போது ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக்குடன் முத்து நெடுமாறன் எடுத்துக் கொண்ட பிரத்தியேகப் புகைப்படத்தை இங்கே காணலாம்.