Home கலை உலகம் நடிகை மனோரமா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

நடிகை மனோரமா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

524
0
SHARE
Ad

manoramaசென்னை, ஜூன் 5 – பழம்பெரும் நடிகை மனோரமா (வயது 71) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட மனோரமாவுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய மனோரமா, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில் மனோரமா மீண்டும் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக அவருக்கு மூச்சுத் திணறல் இருந்து வந்தது. சளித் தொற்றின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து இதய சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சையை அடுத்து மனோரமாவின் உடல் நலன் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இன்னும் சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை மேற்கொள்ளுமாறு மனோரமாவை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.