Home கலை உலகம் கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலாவின் ‘பரதேசி’

கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலாவின் ‘பரதேசி’

748
0
SHARE
Ad

palaசென்னை, பிப்.18- பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பரதேசி’. படம் முடிவடைந்து வெளியிட  தயாராகிவிட்டது.

ஆனாலும் படம் திரையிடப்படும் தேதி குறித்து இதுவரையில் அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் வெளிவரவில்லை.

இந்நிலையில் பரதேசி திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்பப்படுகிறது. இப்படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரிமியர் காட்சியாக திரையிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் அதர்வா, வேதிகா மற்றும் தன்ஷிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாலாவின் படங்களிலேயே மிகக் குறைந்த நாட்களில் (90 நாட்கள்) படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்ட படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.