சிலாங்கூர், பிப்.18- சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், மாநிலச் சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைக்கப் போவதாகக் கூறியிருந்தாலும், சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களைத் தேர்தல் ஆணையம் ஒரே நேரத்தில் நடத்துமானால் அதை அவர் வரவேற்பதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து, மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்கும் உரிமை மந்திரி புசார், சுல்தான், சட்டமன்றம் ஆகியோருக்கு உண்டு என்றாலும் தேர்தலை எப்போது நடத்துவது என்பதை முடிவுசெய்யும் முழு உரிமை தேர்தல் ஆணையத்துக்குத்தான் உண்டு என்று தெளிவாக அவர் குறிப்பிட்டார்.
“நாடாளுமன்றத் தேர்தலின்போது சட்டமன்றத் தேர்தல் சேர்த்து நடத்தப்படுமானால், நல்லதுதான். ‘ தேர்தல் சேர்த்து நடத்தப்படுவதை’ நிச்சயமாக வரவேற்போம்”, என்று காலிட் இன்று செய்தியாளர்கள் கூட்டமொன்றில் விளக்கமாகக் கூறினார்.