Home உலகம் தனித்த இஸ்லாமிய நாடுகளை உருவாக்க நினைக்கும் ஜிகாதி அமைப்புகள் – ஹிலாரி கிளிண்டன்      

தனித்த இஸ்லாமிய நாடுகளை உருவாக்க நினைக்கும் ஜிகாதி அமைப்புகள் – ஹிலாரி கிளிண்டன்      

525
0
SHARE
Ad

Hillary-Clinton-testifies-011நியூயார்க், ஜூன் 14 – சிரியா மற்றும் ஈராக்கில் தீவிரவாதத்தினால் கைப்பற்றப்படும் பகுதிகளை தீவிரவாதிகள் தனித்த இஸ்லாமிய நாடுகளாக உருவாக்கி வருகின்றனர் என அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.

நியூயார்க் நகரில் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் உரையாற்றிய ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது:-

“சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டு போரினால் அந்த நாட்டுக்கு மட்டும் அல்லாமல் அந்த வட்டாரத்திலுள்ள பிற நாடுகளுக்கும் பிரச்சினை ஏற்பட்டு வருகின்றது. ஈராக்கிலும் இதே போன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளது.”

#TamilSchoolmychoice

“ஈராக்கில் உள்ள நகரங்களை கைப்பற்றும் அளவுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு வளர்ந்து செல்லும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. இவ்வாறு நாடுகளின் பகுதிகளை கைப்பற்றுவதன் மூலமாக, சர்வதேச நாடுகளின் எல்லைகளையும் அந்த அமைப்பு மாற்றி வருகின்றது. கைப்பற்றிய பகுதிகளை கொண்டு இஸ்லாமிய நாட்டை உருவாக்க முயற்சிக்கின்றன.”

“சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் ஜிகாதி அமைப்புகள் ஆயுதப்பயிற்சியில் சிறந்தவையாக உள்ளன. அவர்களை முறியடிக்க ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து போர்களில் பயிற்சிபெற்ற ஆயிரம் வீரர்களையாவது சிரியாவுக்கு அனுப்ப வேண்டும். ஒரு நாட்டின் முக்கிய பொறுப்பில் இருந்த அனுபவத்தின் அடிப்படையில் நான் விரும்புவது, சிரியா புரட்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கியிருக்க வேண்டும் என்பதுதான்” என்று அவர் தெரிவித்துள்ளார்.