Home உலகம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு!

491
0
SHARE
Ad

Modi_Visaவாஷிங்டன், ஜூன் 23 – அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க வேண்டும் என்று அந்நாட்டு  பிரதிநிதிகள் சபைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக கலிபோர்னியா மாகாண குடியரசுக் கட்சி உறுப்பினரும், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவின் தலைவருமான எட் ராய்ஸ், அந்தச் சபையின் தலைவர் ஜான் போனெருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், 50 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். இது, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நடவடிக்கை என்பதோடு இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமுமாகும்.”

#TamilSchoolmychoice

“ஆதலால், அமெரிக்கா-இந்தியா இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த உறவை வலுப்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்கா நெருங்கிச் செயல்பட வேண்டும். இந்தியாவுடனான வர்த்தக உறவில் அமெரிக்கா அண்மையில் ஏமாற்றத்தைச் சந்தித்தது.

இந்நிலையில், இருநாடுகளிடையேயான வர்த்தக உறவில் பிரச்னைகளை ஏற்படுத்தும் காரணிகள் நீக்கப்படும் என நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இதனால் இருநாடுகளிடையேயான வர்த்தக உறவு மீண்டும் முன்னேற்றம் அடையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.”

“ஆதலால் அமெரிக்காவுக்கு செப்டம்பர் மாதம் வருகை தரும் மோடியை, நாடாளுமன்றத்தில் கூட்டத்தில் உரையாற்ற வருமாறு அழைக்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

அந்தக் கடிதத்துக்கு பிரதிநிதிகள் சபையின் தலைவர் ஜான் போனெர் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்று அமெரிக்காவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.